ஜீவா உதயம்
  • முகப்பு
  • "கவிஞர்களே"
  • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • "அழகிய நாட்கள்"
"தாயே என்றும் எனக்கு நீயே!"


தாயே!
என்று நான் வருவேன் 
உன் மடி தவழ...
அன்று கழிந்துதான் இறப்பேன்
உன் மடியில் புதைய.....
என்றுதான் வருவேனோ?
உன் முனையில் பால் பருக....
அன்றுதான் தொலையும் 
என் துக்கம்!
அதன் பின்புதான் 
என்னைத் தழுவும் தூக்கம்!

தாய் மண்ணே!
தூக்கம் தொலைந்து 
21 முடிந்து 22 வருடமாகியும் 
ஏக்கம் நிறைந்து நெஞ்சு 
பாழாய்ப் போச்சு!

தாயே! 
தமிழ் அன்னையே....
ஊர்விட்டு ஊர் பிரிகையிலேயே 
உயிர் பாதி போச்சு! 

என்ன பாவம் நாம் செய்தோம்?
உன்னைப்பிரிந்து தவிக்க....
என்ன பிழை நீ செய்தாய்?
எம்மைத் தொலைத்துத் துடிக்க....

என்னைப் போல் பல பேர்க்கு 
உன்னைச் சேரத் துடிப்பு
ஊர் போகும் கனவோடு தான்
என் நாட்களின் நகர்வு.....! 


ஜீவா உதயம்  
Picture
Picture
Copyright 2011 © myliddy.fr, All rights reserved.